மீன் விலை கிடுகிடு உயர்வு

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      வர்த்தகம்
Fish

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக கடல் பகுதிகளில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்.15ந் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், கீழக்கரை மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது. பற்றாக்குறை உள்ளதால் மீன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சூடை மீன் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையிலும், நகரை மீன் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், நண்டு கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.450 வரையிலும், சீலா கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து