முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த காங். தலைவர் ஷாஹி மறைவுக்கு ராகுல் இரங்கல்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எல்.பி. ஷாஹி காலமானார். அவருக்கு வயது 98. அன்னாரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷாஹி சிலகாலம் வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான அவரின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா சாந்தியடை இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து