ஆளுநர் அலுவலகத்தில் 4-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால் பதிலுக்கு பா.ஜ.க.வும் தர்ணா

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Arvind Kejriwal 2017 06 02

புது டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்டதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வளர்ச்சிப் பணிகள் பாதிப்பதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரி ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதனிடையே, கெஜ்ரிவாலுக்கு போட்டியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, எம்.எல்.ஏ. மஜிந்தர் சிங் சிர்சா, ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து