முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து 2018: போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

சோச்சி : உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

போர்ச்சுகல்...

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. நேற்று முன்தினம் 3 ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே, எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான், மொராக்கோவையும் வீழ்த்தின. மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின.

ரொனால்டோ...

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.

ஸ்பெயின் முன்னிலை

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.

ஹாட்ரிக் கோல்

அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து