முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை விட பாக்.கிடம் அதிக அணு ஆயுதங்கள்..! ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 20 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

ஸ்டாக்கோல்ம்: இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அணுஆயுதங்கள்...
ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்துள்ளன.

150 அணு ஆயுதங்கள்
பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியாவில் மொத்தம் 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து