பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

புதன்கிழமை, 20 ஜூன் 2018      வர்த்தகம்
Petrol price1(N)

பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூனின் முதல் இரு வாரங்களில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்று முன்தினம் 8 காசுகள் குறைந்து ரூ. 79.16க்கு விற்பனை செய்யப்பட்டது.  டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.71.54க்கு விற்பனையானது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.79.16க்கு விற்பனையானது.  இதேபோன்று டீசல் விலையிலும் மாற்றமின்றி ரூ.71.54க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து