முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவில் தென் கொரிய அதிபர் மூன் சுற்றுப்பயணம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு, வட கொரிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் ரஷ்யா வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷ்யா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்த ஆவணங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரஷ்யா, தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து தென் கொரிய அதிபருடன் ஆலோசிக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இகோர் மோர்குலோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து