ஏ.டி.எம்.களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுக்கு அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      வர்த்தகம்
atm rush 2018 5 30

ஏ.டி.எம்.களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏ.டி.எம். மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. ஏ.டி.எம். செயல்பாடுகளுக்கான மென்பொருட்கள் நவீனப்படுத்தப்படாததும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததுமே மோசடிகள் அதிகரிக்க காரணம் என ரிசர்வ் வங்கி கருதுகிறது.

எனவே மேம்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை வரையறுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. இதை வரும் ஆகஸ்ட் தொடங்கி படிப்படியாக அமல்படுத்தி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணியை பூர்த்தி செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்காத வங்கி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து