முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடிக்கு எதிராக விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ரூ.13,000 கோடி வங்கி மோசடி வழக்கில் சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக சர்வதேச காவல்துறை விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடியில் ஈடுபட்டுவிட்டு, குடும்பத்துடன் வெளிநாடு தப்பிய விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்பலமானது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ.-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

நீரவ் மோடி பிரிட்டனில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி, இன்டர்போலிடம் சி.பி.ஐ கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், சி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரிகள், டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அப்போது, நீரவ் மோடியின் பாஸ்போர்ட்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து