முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் தபால் ஊழியர்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் தபால் சேவை தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இலங்கையில் கொழும்பு, காலி, மாத்தறை, திரிகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 6 இடங்களில் அஞ்சல் அலுவலகங்கள் 1815-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

ஆசியாவிலேயே முதன் முறையாக 1838-ம் ஆண்டு குதிரை வண்டி தபால் சேவையும், 1850-ம் ஆண்டு அவசர தபால் சேவை புறாக்கள் மூலமும் அனுப்பப்பட்டன. 1865-ல் ரயில் மூலம் தபால்கள் அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக கப்பல், விமானம், பேருந்துகள் மூலம் தபால்கள் கொண்டு செல்லப்பட்டன. தபால் சேவை 2000-ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டது.

இந்நிலையில் ஊதிய உயர்வு, நிரந்தரப் பணி நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தபால் ஊழியர்கள் கடந்த 11-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து தபால் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து ரயில் மூலமாக வெளிமாவட்டங்களுக்கு தபால்களை அனுப்பி வைக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் தபால்கள் மற்றும் பார்சல்கள் தேங்கி உள்ளன. இதனால் இலங்கை முழுவதும் அஞ்சல் துறை முற்றிலுமாக முடங்கி உள்ளது.

கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து