முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிடம் என்ற மாயையை நம்பி முதியோர் பென்சன் வாங்கும் வயதில் பரட்டையும், சப்பாணியும் கட்சியை துவக்கியுள்ளனர் போடியில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்கழக செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.டி.கணேசன், சற்குணம், முன்னாள் நகர்மன்ற தலைவர் பழனிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் கனல்காந்தி வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கழக கொள்கைபரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகை செல்வன் அவர்கள் பேசும்போது, நமது கழகத்தின் பல்வேறு போராட்டத்தின் விளைவாக தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடிந்தது. அதன் வெற்றி விழாவை நாம்தான் கொண்டாட வேண்டும். காவிரி பிரச்னை மட்டுமல்ல, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, ஜல்லிக்கட்டு பிரச்னையை தீர்த்தது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, முல்லை பெரியார் அணையில் நீர்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக சட்டபோராட்டம் நடத்தி உயர்த்தியது, தற்போது 19 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் என பல்வேறு திட்டங்களை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கொண்டு வந்தது, செயல்படுத்தியது கழக அரசு மட்டுமே. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 280 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்தது, 1974ல் காவிரி நதிநீர் ஒப்பந்ததை புதுப்பிக்காதது என தமிழகத்திற்கு திமுக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் ஜெயிக்கவில்லை. 20 ரூபாய் நோட்டு ஜெயித்திருக்கிறது. தற்போது ஆர்.கே நகருக்குள் தினகரன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் 20 ரூபாய் நோட்டை காட்டி பத்தாயிரம் எங்கே என்று கேட்கின்றனர். ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் கடன்காரனாக இருக்கிறார். அவரை நம்பி போன தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களையும் நீங்கள் அனைவரும் அமைச்சர்கள் என்று கூறி அவர்களின் பிழைப்பை கெடுத்திருக்கிறார்.
 ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்திற்கு காரணம் என்ற உண்மையை ரஜினிகாந்த்  சொன்னார்.  கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக கழக அரசு அறிவித்திருக்கிறது. அதிமுக என்பது ஒரு எளிய கட்சி, தொண்டர்களின் கட்சி. இங்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதனால் தான்  கழகம் சுமார் 28 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016 தேர்தலின்போது  தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் 234 தொகுதிகளுக்கும் சென்று தமிழக மக்களிடம் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி தனித்து நின்று அமோக வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனையை செய்தார். அப்படிப்பட்ட தொண்டர்கள் பலமிக்க கட்சியை தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் ஒன்றும் அசைத்துவிட முடியாது.
 தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் என்ற மாயையை நம்பி முதியோர் பென்சன் வாங்குகின்ற வயதில் பரட்டையும், சப்பாணியும் கட்சி ஆரம்பித்துள்ளனர். தனது மனைவியிடமே கடன் வைத்துள்ள கமல், ரஜினி மனைவி நடத்திய ஆஸ்ரமம் பள்ளிக்கு வாடகை கொடுக்கவில்லை. இவர்கள் பொதுவாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள். எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர் அவர்களே எனது வாரிசு என்ற பாக்கியராஜ், நடிகர் சிவாஜி உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. மக்களால் போற்றப்பட்ட ம.பொ.சி கூட அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மிகப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அதற்கு காரணம் நடிகராக இருந்ததால் மக்களிடம் அறிமுகம் கிடைத்தது. நல்லவனாக இருந்ததால் முதல்வராக முடிந்தது என அவரே கூறியுள்ளார் என்றார். அரசியலில் சாதித்து காட்டியவர் புரட்சித்தலைவர். அவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதை சரியான பாதையில் கொண்டு சென்றதால் நமது கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களை பெற்றது. இப்படி நமது கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் எளிய தொண்டனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் பல்வேறு பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பது தான். ஆனால் திமுகவில் மேல்மட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உள்ளனர். அவர்களை, அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வந்துவிட முடியாது.
 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் நலனிற்காக பல்வேறு முடிவுகளை உடனடியாக எடுக்க கூடியவர். காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக தயவில் மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வாஜ்பாயிடம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோரிக்கை வைத்தார். அதற்கு யோசித்த வாஜ்பாய் அரசை தூக்கி எறிந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகின்ற ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் அமைதியான தலைவர்கள். ஆனால் அவர்களிடம் உரசிப்பார்த்தால் அதன் விளைவுகளை அனுபவிக்கதான்  வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இடைவிடாத முயற்சி மற்றும் போராட்டத்தாலும், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தாலும் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. ஆணையம் டெல்லியில் இயங்கும் ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமிக்க மறுத்தபோது மத்திய அரசே நியமித்துள்ளது. எனவே நமக்கு தற்போது காவிரியில் 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றார்.
 இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து