எனது அரசியல் போராட்டத்தை தொடருவேன்: நவாஸ் ஷெரீப்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      உலகம்
Nawaz Sharif 2018 3 8

லண்டன்: சிறையில் இருந்தபடி, எனது அரசியல் போராட்டத்தை தொடருவேன்' என்று நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பனாமா ஊழல் வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, லண்டனில் தனது மகள் மரியத்துடன் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது நாட்டை நேசித்ததற்காக, அதற்குரிய விலையை நான் கொடுக்க வேண்டும் என்றால் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதற்காக நான் பாகிஸ்தான் வருகிறேன். சில ராணுவத் தளபதிகள், நீதிபதிகள் ஆகியோரின் பிடியில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிப்பதற்கு முயற்சி செய்தேன். இதற்காக, எனக்கு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.

என்னை சிறையில் அடைத்தாலும், பாகிஸ்தான் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்கும் வரை எனது அரசியல் போராட்டத்தை தொடருவேன். நான் மக்கள் பக்கம் நின்று போராடுவேன். எனவே, நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, மக்கள் வீதிகளில் இறங்கிப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு இடையூறு செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து