முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு - உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மரண தண்டைனையை எதிர்த்து டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி மருத்துவ மாணவி உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு குற்றவாளி சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோர் மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே மாதம் 4-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி அசோக் பூஷன், ஆர் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதாவது நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் மரண தண்டனையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. மேலும் சீராய்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி முகேஷ் உள்ளிட்ட 4 பேரின் சீராய்வு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து