தமறாக்கி ஊராட்சியில் புதிய மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

Thamaraki boomi pooja  news

சிவகங்கை-       சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், தமறாக்கி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமறாக்கி ஊராட்சியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மகளிர் சுயஉதவிக் குழு வளாகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்   தெரிவிக்கையில்,
           புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒவ்வொரு முறையும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவே புதுபுது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான். அதிலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பான திட்டங்களான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் வளர்இளம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் என எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தார்கள். மேலும் தனிநபர் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமென விலையில்லா கறவைமாடு மற்றும் விலையில்;லா ஆடுகள் வழங்க உத்தரவிட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதியிலும் பெண்கள் சுயமாக தொழில் துவங்கி அதன் மூலம் போதிய வருமானம் பெற்று குடும்பம் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் மகளிர் சுயஉதவிக் குழு அமைக்கும் திட்டத்தை முதன்முதலில் துவக்கியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான். இதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் வறுமை நிலை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்பதே குறிக்கோளாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 20 பெண்கள் கொண்ட குழுக்கள் வீதம் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைத்து ஒவ்வொரு குழுவிற்கும் அந்தப் பகுதியில் தொழில் துவங்குவதற்கேற்ப சூழ்நிலையை அறிந்து அதற்குரிய பயிற்சியை வழங்கி வங்கிகள் மூலம் சுழல்நிதி கடன் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
         ஒவ்வொரு ஊராட்சியிலும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய கூட்டமைப்பு கட்டிடம் கட்டித்தர அரசு உத்தரவிட்டு அதனடிப்படையில் இப்பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. கட்டிடம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் குழுக்கள் ஒருங்கிணைந்து திட்டங்கள் தீட்டுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுயஉதவி குழுக்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   தெரிவித்தார்.
         இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வடிவேல், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் ஜோசப், காமராசு, முன்னாள் கூட்டுறவு துணைத் தலைவர் சசிக்குமார், குமாரப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து