முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரி மலை நடை வருகிற 16ம் தேதி திறப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தேனி
Image Unavailable

கம்பம் - கம்பம் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரி மலை அய்யப்பன் கோவில் நடை வருகிற ஜூலை 16ம் தேதி திறக்கப்படுகிறது.உலகம் முழுவதும் பெயர் பெற்ற  சபரிமலை ஜய்யப்பன் திருக்கோவிலில் ஓவ்வொரு தமிழ் மாதமும் முதல் தேதியின்று திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.,இதே போல் வருகிற ஆடி மாதம் பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி திங்கள்கிழமை நடை திறக்கப்படுகிறது.16ம் தேதி மாலை 5.00 மணிக்கு மேல் சாந்தி நாரயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.தொடர்ந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும்.இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17ம் தேதி செவ்வாய்கிழமை நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை ஆரம்பித்து வைப்பார்.தொடர்ந்து கணபதி ஹோமும் வழக்கமான பூஜைகளும் நடைபெறும்.ஜூலை 21ம் தேதி வரை எல்லா நாட்களிலும் உஷ பூஜை,தீபாராதனை,புஷ்பாபிஷேகம்,அத்தாழ பூஜை,களப பூஜை,சகஸ்ரகசலம் போன்ற பூஜைகளும் நடைபெறும்.21ம் தேதி 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து