முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விமானம் குறித்த ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா மறுப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து அதற்கு விளக்கம் அளித்தார்.

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் அவர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

ராகுலின் இந்த குற்றச்சாட்டுக்கு பின், நிர்மலா சீதாராமன் அவசரமாக சில ஆவணங்களை அவைக்கு கொண்டு வந்து அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி 2008-ம் ஆண்டில், ரபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சரத்தில் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் ஒரு இன்டர்வியூவிலும், பிற நிறவனங்களின் போட்டி காரணமாக, ஒப்பந்த விவகாரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து