சாலையில் கேட்பாரற்று கிடந்த வங்கி காசோலையை காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பண வெகுமதியுடன் பாராட்டு.

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      மதுரை
bank news

மதுரை - மதுரையில் .கடந்த 1 ம் தேதியன்று  யாகப்பா நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் முகமது கௌத்து என்பவர் அண்ணாநகர் உழவர்சந்தை அருகில் நடந்து சென்றபோது கீழே கிடந்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிரப்பப்பட்ட  காசோலை ரூபாய். 3,27,331/- எடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த  தல்லாகுளம்  காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன்  என்பவரிடம்  ஒப்படைத்தார். அந்த காசோலையை அண்ணாநகர் (குற்றம்) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி மூலம் மேற்படி காசோலைக்கு சொந்தமான  பிரணவ் ஏஜென்சியின் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி காசோலையை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைக்க உதவிய முகமது கௌத்து என்பவரை , மதுரை மாநகர ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் பணவெகுமதி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து