லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு உதவி செய்த டெண்டுல்கர் மகன்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
tendulkar son help 2018 8 12

லண்டன் : லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு ஆடுகள பராமரிப்பில் ஜாம்பவான் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் உதவி செய்துள்ளார்.

இலங்கையில் நடந்த 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜுன், தற்போது லண்டன் எம்.சி.சி. கிளப்பில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் பந்துவீசி வருகிறார்.

இந்நிலையில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மைதானத்தை உலர வைக்கும் பணியில் ஊழியர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் உதவி செய்துள்ளார். இதுதொடர்பாக லார்ட்ஸ் மைதான அதிகாரப்பூர்வ  டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது,

மேலும் லார்ட்ஸ் மைதான வாயிலில் அர்ஜுன் டெண்டுல்கர்  ரேடியோக்களை விற்றார். இதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது சுட்டுரையில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ஜுனிடம் பெரும்பாலான ரேடியோக்கள் விற்று விட்டன. சில மட்டுமே கையிருப்பில் உள்ளன எனக் கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து