முன்னாள் பணியாளரை நாய் என அழைத்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      உலகம்
trump-omarosa 2018 8 15

நியூயார்க் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணை நாய் என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளராக இருந்தவர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன். டிரம்ப் தன்னை நாய் என்று கூறியதாகவும் அதற்கு என்னிடம் ரகசியமாக பதிவு செய்த உரையாடல் இருக்கிறது என்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பின் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த ஆண்டு அப்பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் அன்ஹின்ஜெட் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஒமரோசா மனிகால்ட் நியூமேன் எழுதிய புத்தகம் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒரு கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதாலே தன்னை இழிவாக பேசினார். ஒரு குற்றமும் செய்யாத என்னை வேலையில் இருந்து வெளியேற்றினர். என்னை பல முறை இழிவாக பேசினார். என்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு என்று கூறியுள்ளார்.

டிரம்ப் தன்னை இழிவாக பேசிய உரையாடலை ஒமரோசா அந்த நிகழ்ச்சியிலேயே வெளியிட்டார். அந்த உரையாடல் பதிவு, அவரும் டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது. மேலும் அந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உரையாடல் குறித்து டிரம்ப் தான் ட்விட்டரில் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் ஒமரோசாவை டிரம்ப் நாய் என கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், கஷ்டப்படும் பைத்தியக்கார பெண்ணுக்கு நன்மை செய்ய நினைத்து வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை. அந்த நாயை வேலையை விட்டு துரத்தியது நல்ல செயல் ஜான் கெல்லி (வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி) என அவர் பதிவிட்டுள்ளார். கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே டிரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் டிரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து