இறக்குமதி பொருட்களின் வரியை அதிகரித்திருப்பது தவறான முடிவுதுருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      உலகம்
America thurki-2018-08-16

வாஷிங்டன்,அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கார், மதுபானம், புகையிலை பொருட்கள் மீதான வரியை துருக்கி அதிகரித்திருப்பது தவறான முடிவு என்று அந்நாடு எச்சரித்துள்ளது.

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா கடந்த வாரம் உயர்த்தியதிலிருந்து துருக்கியின் பண மதிப்பு வெகுவாகச் சரிந்தது. மேலும் இந்த வரிவிதிப்பு குறித்து டிரம்ப்,
துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன்.

நம்முடைய வலுவான டாலருக்கு முன், துருக்கியின் லிரா சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களான கார், மதுபானம், புகையிலை ஆகியவற்றுக்கான வரியை துருக்கி அதிகரித்து அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும் போது, இந்த முடிவுக்கு துருக்கி நிச்சயம் வருத்தப்படும். வரியை உயர்த்தி துருக்கி தவறான முடிவை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து