தாயின் மரணச் செய்தி அறிந்தும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டிஐஜி

siva news

சிவகங்கை - சிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் டிஐஜியாக ஆஸ்டின் ஈபன் பணியாற்றி வருகிறார்.  
  கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்தில் பாழை என்ற ஊரில் வசித்து வந்த இவரது தாய் மேரி ஈபன் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் அதனை பொருள்படுத்தாமல் பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணி வகுப்பு மரியாதை  ஏற்றுக் கொண்டார்.  அதன் பின்னர், அவரது தாயின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து  கொள்வதற்காக சென்றுள்ளார். இது குறித்து அவர் கூறியது: கடமை உணர்வு தான் முதல் பணியாக இருக்க வேண்டும் என எனது தாய் என்னிடம் அடிக்கடி கூறுவார். அந்த உணர்வுடன் தான் எனது தாய் இறந்த செய்தி அறிந்தும்,சுதந்திர தினத்தில் என்னுடைய கடமையை ஆற்றினேன் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து