முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      உலகம்
India-Usa 2025-06-30

Source: provided

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார். சமீபத்தில், ''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். தற்போது சீனாவில் இருந்து ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளோம்.

நாங்கள் அனைத்து நாடுகளிடமும் ஒப்பந்தம் செய்ய மாட்டோம். சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக்குழு வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.

இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. ''உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்ப்பின் காலக்கெடு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைவதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது'' என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து