முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்குறள் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      சினிமா
Thirukkural-Review 2025-06-

Source: provided

வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி. அவர் எழுதியதை மதுரைத் தமிழ்ச் சங்கம் அங்கீகாரிக்காமல் நிராகரித்து விடுகிறது.  இதற்கிடையே, நல்லாட்சி புரியும் மன்னர்கள் சூழ்ச்சிகளால் வீழ்த்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லாட்சி அமைவதற்கான யுத்த பணிகளையும் திருக்குறளை எழுதுவது என இரண்டயும் எப்படி கையாளுகிறார் என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கும் படமே திருக்குறள். நடிகர் சிவாஜி கட்டபொம்மனாக மக்கள் மனதில் எப்படி  வாழ்கிறாறோ.. அதுபோல் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலைச்சோழன் மக்கள் மனதில் இடம் பிடிப்பது உறுதி. ஆசிரியருக்கான அனுபவம், பிறருக்கு அறிவுரை கூறும்போது தெளிவு, மக்களுக்காக வருந்தும் போது பரிவு, போர்க்களத்தில் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கம்பீரம் என அத்தனை உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் கலைச்சோழன். வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, அழகிய முகத்துடன் அருமையான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.  இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் சங்கால கதையை காதல், யுத்தம், கொடை உள்ளிட்ட பல விசயங்களை திருக்குறளோடு தொடர்புபடுத்தி சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், திருக்குறள் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறந்த படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து