முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கடத்தல் வழக்கில் ராஜபக்சேவிடம் போலீஸார் விசாரணை

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் கடந்த 2008-ம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தி நேஷன் பத்திரிகையில் பணியாற்றிய கெய்த் நோயர் என்ற செய்தியாளர், அடையாளம் தெரியாதவர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலமாக தாக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிடம்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தாம் அதிபராக இருந்த போது, அமைச்சரவையில் ஒருவராகவும், நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் இருந்த காரு ஜெயசூரியா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாக ராஜபக்சே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து