முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மக்களை கிண்டல் செய்து வலைதளத்தில் கருத்து தெரிவித்தவரை சஸ்பெண்டு செய்த ஏமன் நிறுவனம்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

துபாய்,மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த ஊழியரை உடனடியாக வேலையை விட்டு தனியார் நிறுவனம் நீக்கியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இவர் கேரளாவில் பிறந்தவர் என்றபோதிலும், குறிப்பிட்ட வயதுக்குப்பின் ஏமன் நாட்டுக்குச் சென்று லூலு குரூப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கேரளாவில் கொச்சி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இவரின் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

மழைவெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, ரூ.12 கோடி நிதியுதவியை முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் அரசிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், ஏமன் நாட்டில் லூலு குழுமத்தின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் செரு பழயட்டு கேரள மக்கள் குறித்து பேஸ்புக்கில் கிண்டலாகக் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தக் கருத்து கேரள மக்களுக்கு வேதனையைத் தருவதாக இருந்தது. இந்தக் கருத்துக்கு ஏராளமானோர் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் ராகுலின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்த லூலு குழும நிறுவனம் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர் நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு பின் ராகுல் பேஸ்புக்கில் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து