கள்ளழகர் கோவில் திருபவுத்திர திருவிழா 108 கலசங்கள் வைத்து நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்.

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      மதுரை
alagar

அலங்காநல்லூர்.-        திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைண ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் திருபவுத்திரவிழாவும் ஒன்றாகும்.இது ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறும்.அதன்படி அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று காலையில் பட்டர்களின் வேதமந்திரங்கள் மேளதாளம் முழங்க தொடங்கியது. இதில் உற்சவர் கள்ளழகர் சுந்தரராச பெருமாள் அங்கு எழுந்தருளினார். அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது 108 கலசங்கள் தனிதனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைபழம், மாவிலை, புஷ்பங்கள் மாலைகள் தாம்பூலங்கள் இணைக்கப்பட்டிருந்தது.
    தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள் திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டுமாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராசபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார், மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் இந்தவிழா தினமும் நடைபெறும்.26ந்தேதி 5ம் நாள் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது.
   இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது, உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளின் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமே இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறைபணியாளர்கள் செய்திருந்தனர்.                 

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து