முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ரக்ஷாபந்தன்: ராஜஸ்தானில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பெண்களுக்கு நேற்று இலவச பேருந்து பயணத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரக் ஷா பந்தன் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தான் மாநில அரசு ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியிலிருந்து நேற்று இரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு பெண்கள் மாநிலத்தின் எந்த பேருந்திலும் பயணம் செய்ய இலவச சேவையை அறிவித்துள்ளது.

சாதாரண மற்றும் எக்பிரஸ் பேருந்துகள் உள்ளிட்ட ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அரசுப் பேருந்துகளில் இச்சேவை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பேருந்துக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ரக்சாபந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து