பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
election-comission 2017 11 01

புதுடெல்லி : அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி வரும் 27ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

முன்னேற்பாடுகள்...

மக்களவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், வரும் 27ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

வாக்குசீட்டு முறை...

வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் எழுந்து வரும் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து