முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை நிறைவு 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
இந்த முறை 2.85 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.

கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையின்போது, சீதோஷ்ண மாற்றம் மற்றும் இயற்கையான உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் யாத்ரீகர்கள், பணியாளர்கள் உள்பட 38 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் காவல்துறை, துணை ராணுவப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட படைப் பிரிவுகளில் இருந்து 40,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரு சக்கர வாகனங்களில் காமிராவுடன் கூடிய கண்காணிப்பாளர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் பணியில் ஈடுபடுத்தியது. யாத்திரையில் பங்கேற்கும் வாகனங்களை கண்காணிப்பில் வைத்திருக்கும் வகையில் ரேடியோ அலைவரிசை கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் யாத்திரை அமைதியாக நிறைவு பெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து