முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீன்ஸ், கார்கோ பேன்ட் அணிந்து வர வேண்டாம் அதிகாரிகளுக்கு திரிபுரா முதல்வர் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

அகர்தலா, திரிபுராவில் உள்ள அதிகாரிகள் அதிகாரபூர்வ செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு வருகை தருகையில் ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் போன்ற உடைகளை அணிந்து வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இது குறித்து கடந்த  20-ம் தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசு செய்தி குறிப்பில், வருவாய், கல்வி மற்றும் தகவல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான முதன்மைச் செயலர் சுஷில் குமார் தெரிவித்திருப்பதாவது:-

முதல்வர் தலைமையில் மாநில அளவில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும் மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கு ஆடை அணிவிப்பது தொடர்பாக வரையறை செய்யப்படுகிறது. ஜீன்ஸ் மற்றும் கார்கோ பேன்ட்கள் போன்ற சில சாதாரண உடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மாநில அளவிலான உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வரும் போதும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த உடை வரையறையைப் பின்பற்ற வேண்டும்.

அதே போல முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் கூட்ட நடவடிக்கைகளின்போது தங்களுடைய செல்போன்களில் வரும் செய்திகளை படிப்பது, செய்திகளை அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவது அவமதிப்பின் அடையாளமாகும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து