கர்நாடக அரசு விரைவில் கவிழும் மத்திய அமைச்சர் அனந்த்குமார் உறுதி

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
Anand Kumar 2018 8 29

பெங்களூர் : கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசு விரைவில் கவிழும். அதன் பிறகு பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது என மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:-

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசினால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருப்பதால் அந்தக் கட்சியினரே அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையே முன்னாள் முதல்வர் சித்தராமையா வெளிப்படுத்தியுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகத் துடிக்கிறார். சித்தராமையாவுக்கும் குமாரசாமிக்கும் இடையேயான மோதலால் ஆட்சி கவிழப் போகிறது. எனவே இந்த ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க எந்த முயற்சியும் மேற்கொள்ளத் தேவையில்லை.

இந்தக் கூட்டணி விரைவில் கவிழ்ந்தவுடன், பா.ஜ.க. ஆட்சி அமைவ‌து உறுதியாகி விட்டது. தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்ற பா.ஜ.க. ஜ‌னநாயகக் கடமையை ஆற்றும் வகையில், சிறப்பாக ஆட்சி நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து