ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      தமிழகம்
mettur dam 2017 9 28

மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6,800 கன அடியிலிருந்து 10,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 119.83 அடியாகவும், நீர் இருப்பு 93.20 டி.எம்.சியாகவும் இருந்தது.நொடிக்கு 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே, மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை 3 முறை எட்டிய நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பட்டுள்ளது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் 17,023 கனஅடியில் இருந்து 20,517 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணை நேற்று  4-வது முறையாக முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி நொடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் 120.04 அடியாகவும், நீர் இருப்பு 93.53 டி.எம்.சியாகவும் இருந்தது. ஒகேனக்கல் அருவி பகுதியில் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் 54-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து