பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்டதால் விமானத்தில் பெண் பயணியுடன் தமிழிசை கடும் வாக்குவாதம்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
tamilisai new(N)

தூத்துக்குடி,தூத்துக்குடி விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் நேற்று  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது விமானத்தில் தமிழிசையை கண்டதும் சோபியா என்ற இளம் பெண் ஒருவர், பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்று பா.ஜ.க.வுக்கு எதிராக திடீரென கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

விமானத்துக்குள்ளேயே தனியாளாக இப்படி பா.ஜ.க.வுக்கு எதிரான முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பா.ஜ.க.வை விமர்சித்து கோஷமிட்ட அந்த பெண்ணிடம் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து