ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் காலமானார்

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
rajini brother 03-09-2018

சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி நேற்று காலமானார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவின் மனைவி கலாவதிபாய்க்கு கடந்த சில காலங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக பெங்களூரிவிலேயே ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் எடுத்து கொண்டார். இந்த நிலையில் கலாவதிபாய்க்கு நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உயிர் பிரிந்தது. அண்ணி இறந்த தகவலறிந்த ரஜினி உடனடியாக பெங்களுருக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றார். கலாவதிபாய்க்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து