சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      தமிழகம்
chennai high court

சென்னை, வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவின் கீழ் சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்த தடை கோரி பூவுலகின் நண்பர்கள் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துக்கேட்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் 2013-ல் கொண்டு வரப்பட்ட நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லும் எனக்கூறிய நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து