ஆன்லைனில் அரசியல் கட்சி விளம்பரங்கள் கண்காணிக்க கூகுள் உதவியை நாடும் தேர்தல் ஆணையம்

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
election-comission 2017 11 01

புது டெல்லி : தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யும் போது அந்த விளம்பரத்தின் செலவுகள், நேரம், தேதி, முன்அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொள்ள கூகுள் , பேஸ்புக் ஆகியவற்றின் உதவியை தலைமைத் தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஓ.பி.ராவத் உள்ளிட்ட பிற ஆணையர்கள் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.

அப்போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் விளம்பரங்கள், செலவுகள், யார் விளம்பரம் செய்வது, எந்தெந்த பகுதிகளுக்கு யாரெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கண்காணிக்க சிறப்பு செயல்முறையை உருவாக்கி தருவதாக கூகுள் நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளது.

இதனால், வரும் மக்களவைத் தேர்தல் அல்லது 4 மாநில சட்டசபை தேர்தலில் ஆன்-லைனில் அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காகச் செய்யும் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து