'சிவன்தான் உலகம்' ராகுல் காந்தி வெளியிட்ட 'கைலாச விடியோ'

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      இந்தியா
Rahul Gandhi 2017 06 03

புதுடெல்லி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்தமாதம் 31-ஆம் தேதி முதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரை துவங்கியதில் இருந்து கைலாஷ் மானசரோவர் தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 'சிவன்தான் உலகம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த விடியோவானது சரியாக 18 விநாடிகள் ஓடுகிறது.

இதில் கைலாஷ் மானசரோவர் பகுதியில் உள்ள மலைச்சிகரங்களின் அழகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன..

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து