5 போட்டிகளிலும் டாஸில் தோல்வி: நான் டாஸ் வெல்ல 2 பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும்: கேப்டன் விராட் கோலி விரக்தி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      விளையாட்டு
Virat Kohli 2018 09 07

Source: provided

லண்டன் : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த விராட் கோலி, இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து வெற்றி...

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் டாஸ் சுண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘ஹெட்’  என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

டாஸ் தோற்றார்...

இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார். தொடரை இழப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இன்று டாஸ் தோற்ற விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் டாஸ் வெல்ல வேண்டுமென்றால், ‘காய்’னின் இரண்டு பக்கமும் ‘ஹெட்’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்று பரிதாபமாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து