பொம்மை உடைகளை அணிந்து சானியா கொண்டாடிய பார்ட்டி - சமூக வலைதளத்தில் வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      விளையாட்டு
Sania-doll costumes 2018 9 9

மும்பை : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது தன் கர்ப்ப காலத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்து வருகிறார். தற்போது சானியாவுக்காக அவரது குடும்பத்தினர் கொண்டாடிய பார்ட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை சானியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சானியாவும், அவரது சகோதரி ஆனம் ஆகியோர் மிருகம் போன்ற பொம்மை உடைகளை அணிந்து உள்ளனர். அந்த புகைப்படத்தில் சானியா பச்சை நிற யானை போன்ற உடையும், அவரது சகோதரி ஆனம் ரோஸ் நிற முயல் போன்ற உடையும் அணிந்துள்ளனர். இந்த பார்ட்டியில் சானியாவின் கணவர் ஷோயப் மாலிக் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் சானியா.  சானியா தன் கர்ப்ப காலத்தில் இருப்பதால் சில மாதங்களாக டென்னிஸ் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தான் இழந்து விட்டதாக கூட முன்பு பதிவிட்டு இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து