ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை:அமைச்சரவை முடிவைத்தான் கவர்னர் அமல்படுத்த வேண்டும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Attorney General 10-09-2018

புது டெல்லி,ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை முடிவைத்தான் கவர்னர் அமல்படுத்த வேண்டும் என்றும்,  இதற்காக யாரிடமும் அவர் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 28 வருடமாக இவர்கள் சிறையில் உள்ளனர். இதை கருத்தில் கொள்ள வேண்டும். மிக நீண்ட காலம் இது. இதை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் முடிவெடுக்க வேண்டும். நிரந்தரமாக அவர்களை சிறையில் வைப்பது நியாயம் இல்லை, மனிதாபிமான செயலும் இல்லை. மேலும் தமிழக அமைச்சரவை தனது பயன்படுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

இதை கவர்னர் ஏற்க வேண்டும். அதைத்தான் சட்டமும் சொல்கிறது. இது தொடர்பாக எந்த அமைச்சகத்தின் ஆலோசனையையும் கவர்னர் பெறத் தேவையில்லை, அவசியமும் இல்லை. அமைச்சரவை முடிவைத்தான் கவர்னர் கேட்க வேண்டும். அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சோலி சொரப்ஜி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து