மேகதாது அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் மோடியை கூட்டாக சந்தித்த கர்நாடக அரசியல் பிரதிநிதிகள்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
kumaraswamy Mekedatu dam  10-09-2018

பெங்களூர்,மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரதமரை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். இதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்ற குமாரசாமி, ரூ.1912 கோடி மதிப்பிலான  திட்ட வரைவு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில உறுப்பினர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து