முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நிதீஷ்குமார் கட்சியில் இணைந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா,தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியில் இன்று இணைந்தார்.
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார். பின்னர் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், அவர் அரசியல் சார்ந்த பணிகள் எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். இதன் மூலம் பீகார்  மாநிலத்தில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதாதளக் கூட்டணிக்கு அவர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து