முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவசமாக கச்சா எண்ணெய் கிடைக்கும் இடத்தை தீவிரமாக தேடுகிறது பா.ஜ.க. டுவிட்டரில் ப. சிதம்பரம் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கச்சா எண்ணெய் எங்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற இடத்தை பா.ஜ.க. தீவிரமாகத் தேடிக் கொண்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பா.ஜ.க. தலைவரோ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கிறார். கச்சா எண்ணெய் எங்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற இடத்தை பா.ஜ.க. தீவிரமாகத் தேடிக் கொண்டு இருக்கிறது.

பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி. வரியும் வந்தது முதல் நாட்டில் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையரோ, கறுப்புப் பணம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கிறது என்கிறார். அப்படியென்றால், கறுப்புப் பணம் எங்கிருந்து வருகிறது. புதிய ரூ. 2000 நோட்டுகள் எங்கிருந்து வருகிறது. இவ்வாறு சிதம்பரம் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து