முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள்:அரசியல் தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பிரதமர் நரேந்திர மோடி நேற்று  68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மோடியின் பிறந்த நாளான நேற்று அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் நமது பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும், மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் வாழ்த்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதே போல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உடல் நலத்துடன் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து