முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு: குமாரசாமி

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி நேற்று  வெளியிட்டார்.

ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எரிபொருள் விலையைக் குறைத்த பின்னர் குமாரசாமிக்கு எதிரான அரசியல் அழுத்தத்தை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எரிபொருளுக்கான வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைத்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல்வர் குமாரசாமி எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ''பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதென கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன'' என்றார்.

சர்வதேச காரணிகளை சுட்டிக்காட்டி இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசியல் ரீதியாக கடும் கண்டனத் தாக்குதல்களை நரேந்திர மோடி அரசுக்கு எதிராகத் தொடுத்து வருகின்றன. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து