கிட் ரூ கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக கபாடி போட்டி

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      சிவகங்கை
21 siva news

காரைக்குடி.-       காரைக்குடி கிட் ரூ கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டலத்தில் உள்ள 21 பொறியியல் கல்லூரிகளின் ஆண்கள் பிரிவு கபாடி போட்டி 19-09-2018 மற்றும்    20-09-2018 ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.  போட்டிகளின் இறுதி நாளான நேற்று முதலில் அரையிறுதி போட்டி நடைபெற்றது. அதில் கிட் ரூ கிம் கல்லூரிகள் மௌன்ட் சீயோன் கல்லூரியை 52-12 என்ற புள்ளிகளுடன் வென்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் மதர்தெரசா கல்லூரிஇ இராஜ ராஜன் கல்லூரியை 45-31 என்ற புள்ளிகளுடன் வென்றது. இறுதி ஆட்டத்தில் கிட் ரூ கிம்                கல்லூரி 42-27 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்றது.  மதர்தெரசா  கல்லூரி இரண்டாமிடத்தையும்இ மௌன்ட் சீயோன் கல்லூரி மூன்றாமிடத்தையும்இ இராஜ ராஜன்             கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட்  ரூ கிம் கல்லூரிகளின் தலைவர் அய்யப்பன் அவர்கள் கோப்பைகளை வழங்கி விளையாட்டு வீரர்களை பாராட்டினார்கள். கல்லூர்p ஆலோசகர் கலியமூர்த்திஇ பொருளாளர் ராமசுப்பிரமணியன்இ  ட்ரஸ்டி கண்ணதாசன்இ இயக்குநர் அண்ணாமலைஇ பொறுப்பு முதல்வர்கள் சுசில்குமார்இ கார்த்திக்இ டீன் நாகநாதன்இ உடற்கல்வி இயக்குநர் பழனியப்பன்இ துறைத்தலைவர்கள்இ பேராசிரியர்கள்இ மாணவஇ மாணவிகள்இ அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.                     

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து