முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது: ஐகோர்ட்டில் ஹெச்.ராஜா முறையீடு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல் துறையையும் விமர்சித்ததாக கூறி திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

உயர் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காகப் பதிவு செய்வதாகவும், இது தொடர்பாக ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி ஹெச்.ராஜா  சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அதில் நீதிபதி சி.டி. செல்வம், நிர்மல் குமார் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர முடியாது எனவும் தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் எனவும் ஹெச்.ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இதுதொடர்பான உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து எச்.ராஜாவின் வழக்கறிஞர் விரையில் இதனை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து