முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்தம் ஏற்பட்ட போது நான் பதவியிலேயே இல்லை - பிரான்ஸ் அதிபர் மழுப்பல் பதில்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன், அப்போது தான் பதவியில் இல்லை என மழுப்பலாக பதில் அளித்தார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அரசியலில் புயலை கிளப்பி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரிடம் நிகழ்ச்சிக்கு இடையே இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கமல் அவர் நழுவினார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது தான் பிரதமர் பதவியில் இல்லை என மழுப்பலாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸிடம் தெளிவான விதிமுறைகள் உள்ளன. இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். இருநாடுகளுக்கும் ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களி்ல் விரிவான ஒத்துழைப்பு உள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து