முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டத்திறனை மேம்படுத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தவானுக்கு கதவு திறந்தே இருக்கும் : தேர்வுக்குழு தலைவர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தெரிவித்த தேர்வுக்குழு தலைவர், ஆட்டத்திறனை மேம்படுத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறுவதற்கான கதவு திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர் நாயகன்

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஆச்சர்யம் அளிக்கிறது

ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

கதவு திறந்தே இருக்கும்

அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து