முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 லட்சம் டன் இரும்பு, 55 கி.மீ. நீளம் உள்ள கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம் சீனாவில் 24-ம் தேதி திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் வரும் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளது.சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் இந்த சாலை இடம்பிடித்து இருந்தது. அதை சரி செய்ய இந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த பாலம் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 22.9 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. 6.7 மீட்டர் தரையிலும், மீதமுள்ள தூரம் பேர்ல் நதி மீதும் செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் அதிக அளவு ஸ்டீல் மூலம் கட்டப்பட்டது. ஈபிள் கோபுரம் கட்ட பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 4 லட்சம் டன் இரும்பு இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட எல்லா விதமான இயற்கை பேரிடர்களிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பயணிக்க மொத்தம் 45 நிமிடம் மட்டுமே ஆகும். முன்பு பாலம் இல்லாமல் சுற்றி செல்ல 3 மணி நேரம் வரை ஆகி இருக்கிறது. இந்த பாலத்தை கட்ட 8 வருடம் ஆகியுள்ளது. 2009 டிசம்பரில் இந்த பாலத்தை கட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கடலுக்கு நடுவில், பாதுகாப்பிற்காக பெரிய செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த தீவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலத்திற்கு சப்போர்ட் அளிக்கப்படுகிறது. இந்த பாலம் வரும் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து